Thursday, February 18, 2010

ஏன்

ஓ...அமெரிக்கத் தந்தையே !
ஏன்
எம்மில் அமிலம் தோய்க்கிறாய்
விடிய விடிய
கதறினேன்
ஒரு சொட்டுப்பாலுக்கய்
எனக்கு கிடைத்தது
என் தாயின்
குண்டடிபட்ட
இரத்தம்
என் பொக்கய் வாய்ச்
சிரிப்பில்
என் சின்னச் சின்ன
அசைவுகளில் என் குடும்பமே
மகிழ்ந்திருந்தது
ஓ..அமெரிக்கத் தந்தையே !
உன்
பெற்றோலிய பசிக்காய்
ஏன்
எங்கள் குடும்ப மகிழ்வை
விளைபேசினாய்
காலைப் பனித்துளிகளில்
குளித்து வந்த‌
என் சின்ன வீடு

என்னை
முத்தமிட்டு முத்தமிட்டு
வருடிக்கொடுத்த
என் சகோதரி

என் தொட்டிலருகில்
மணிக்கணக்காய் நின்று
விளையாட்டு காட்டும்
என் பெரிய சகோதரன்

என்னை
அலாக்காய் தூக்கி
கொஞ்சி மகிழும்
என் தந்தை

யாருமே
இல்லையே
என்ன செய்தாய்
இவர்களை

உன்னை கேட்க
யாருமே இல்லையா?

காலை எழுந்தவுடன்
முதல் சப்தமாய் கேட்கும்
அந்த வாங்கொலி

பறவைகளின்
விடிகாலை இன்னிசை

பால்கார தாத்தாவின்
வரண்ட குரல்

தெருவோரம் பயணிக்கும்
பயணிகள் சப்தம்

எங்கே மாண்டன
இவைகள் எல்லாம்

1 comment:

  1. Wow. wat a greate poet & where is from???

    Nice poems in raw. Excellent.............

    by M.Shiyam

    ReplyDelete