எழுந்திடு எழுந்திடு
துணிந்தால் உனக்கு
வானமும் எட்டும் தூரம்!
என்ன இல்லை உனக்கு ?
ஒரு கவளச்
சோறின்றிச் சாகும்
இவ்வுலகில்
என்ன இல்லை உனக்கு ?
இறைவன் கொடுத்த
அறிவுப் பலம்
ஆரோக்கிய உடல் பலம்
இஸ்லாத்தை விளங்கிய உள்ளம்
இதனைவிட
உலகில் உனக்கென்ன வேண்டும் ?
உலகில்
உயர்வடையும் பாதை
மலர் தூவியதல்ல என்ற
யதார்த்தம் புரி,
நினைத்தால்
நடந்துவிடும்
மாயாஜால உலகமல்ல
என்ற
உண்மை விளங்கு,
உழைப்பும்
வியர்வையுமே
விடிவின் திறவுகோள் என்ற
ஞானம் கொள்.
என்ன இல்லை உனக்கு ?
இறைவனின் அருள்
அதனை இறைஞ்ச
இரண்டு கைகள்.
என்ன இல்லை உனக்கு ?
உனக்குள்
பற்றும் சிறிய தீப்பொறி
உன்னை உலகுக்கு காட்டும்
பெரும் பிழம்பாகட்டும்
இடைக்கிடை உன்னை
காயப்படுத்தும்
தோல்விகளால்
நீ
எரிந்து விடதே!!!
No comments:
Post a Comment