ஒரு இருண்ட வனத்தின்
கருமையில்
என் கண்களை
பழக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றேன்
இரவைக் கிழித்துவரும்
சப்த்தக் கடாட்சம்
என்னை
பயமுறுத்தினாலும்
மனத்தை திடப்படுத்தி
முன்னேறிக்கொண்டிருக்கின்றேன்
கால்களின்
அடிகளைக்கூட
கவனமாக வைக்கிறேன்
என்னைச் சூழ்ந்து திரியும்
மின்மினிப் பூச்சிகளை
என் பாதை தேடலுக்கான
மின்விளக்காக்கிக் கொள்கிறேன்
கால் இடறி விழுந்த
சந்தர்ப்பங்களில்
என்னில் நானே
நொந்து கொண்டு
என்னை நானே
திடப்படுத்திக்கொள்கிறேன்
காட்டு மிருகங்களின்
கண்களில் பட்டு விடாமல்
வளர்ந்திருக்கும்
முட்களில் தைத்து விடாமல்
என் பயனத்தை
தொடர்ந்துகொண்டிருக்கின்றேன்
கிராமம்
தூரத்தில் இருக்கும்
என்ற நம்பிக்கையே
என் இப்போதைய பலம்
மிருகத்தை பிடிக்கும்
பொறிகளில் சிக்கிவிடாமல்
ஆளை விழுங்கும்
குழிகளில்
விழுந்து விடாமல்
இருளை
கிழித்துப் பார்த்து பார்த்து நடக்கின்றேன்
Assalamun alaikum
ReplyDeleteI have downloaded all this and I will read it and make all the corrections and will send soon via your email.
thank you
UK ABDUR RAHEEM