Thursday, February 18, 2010

காஷ்மீர் குழந்தை

ஓர் இரத்த சப்தத்தின்
ஆர்ப்பரிப்பில்
பிறந்தது அந்தக் குழந்தை
காஷ்மீரின் குளிர்மை ,
அதன் பனித்துளி வருடலில்
பழக்கப்படாமல்
வெடியோசை கேட்டுக்கொண்டே
வளர்ந்தது அந்தக் குழந்தை
ஒரு தேசமே புன்னகைக்குமா?
அத்தேசம் புன்னகைத்த‌து
மரங்கள் நகைக்குமா?
அங்கு அது நடந்தது,
அது ஒரு சுவர்க்க தேசம்
ஆனால்
அங்கு உயிர்த்த
அந்தக் குழந்தையின்
முகத்தில் மட்டும்
மரண அச்சம்
மனித காலடி யோசை
கேட்டாலே
திடுக்கிட்டது
அக்குழந்தை
அவன் தந்தையின் உயிர்
அவன் தாயின் மரணம்
அவனது உடமை
இவை ஒன்றும்
அவனுக்கு சொந்தமில்லை
அவன் நிலத்தில்
தோன்றும்வசந்த பொழுதுகளும்
அவன் வானத்தில் உதிக்கும்
மிண்ணும் நட்சத்திரங்களும்
அவனுக்கு எப்போதும்
மகிழ்ச்சியாக இருந்ததில்லை

No comments:

Post a Comment