Saturday, February 20, 2010

எத்தனைக் காலமெடுக்கும் ?

இருளதில்
செப்பித்த
என்
சின்ன
ஆர்த்மார்த்தங்களை
வெளிச்சமதில்
பூப்பிக்க
என்னில்
எத்தனை
உன்மத்த கனவுகள் ?
வாழ்வதில்
வாழ
பூக்களை இரவல்
கேட்கவில்லை,
ஒரு பிடி
சோற்றை
உய்விக்கும்
ஒரு கவளத்தை
யாசிக்கின்றேன்
வீதியோர
நாய்கள்,
தன் இனத்தை
உண்டு மகிழும்
விசமத்தனத்துள்
துவய்ந்துபோன
மனிதப்பிண்டங்கள்
தன் நாவில்
துளிரும் உமிழ்நீருக்கு
மனிதகுருதி தேடுகின்றன
ஆழ்ந்துபோன
மனிதத்துவத்தை
நுனி நாக்கால்
தேடும் அவலம் இன்று
மனித குலத்தில்,
நினைவுகளின்
நெரிசலில்
காணாமல் போன
தூக்கங்கள்
தூர்ந்த விடிவுகளை
கனாக்காணும்
இளைய வதனங்களில்
ஒடிந்து போன
நம்பிக்கைகள்
துவேஷ
தனமெடுத்து
வடிவமைக்கும்
இரத்த வெறியெடுத்த
கொள்கைக்குள்
ஆழ்ந்து போன
மனிதத்துவம்
நிமிர்ந்துவர
எத்தனைக் காலமெடுக்கும்

No comments:

Post a Comment