கழுத்து நெறிக்கப்பட்ட
கோழியின்
கதறலைக்
கண்டிருக்கின்றேன்
வெட்டப்பட்ட
மாட்டின் பீரீட்ட
இரத்தத்தையும்
அப்போது
அதன் கண்களில்
தெறியும்
மிரட்சியையும் பார்த்திருக்கின்றேன்
பூனையால்
பிடிபட்ட எலியின்
தப்பிப்பதற்கான
இறுதி முயற்சியையும்
கண்ணுற்றிறுக்கின்றேன்
இவைகள்
நடப்பதெல்லாம்
இருந்துவிட்டுத்தான்
ஒரு மனிதனின்
சாவுக்குப் போராடும்
அந்த
கணத்த கணங்கள்
இப்போதெல்லாம்
நாள்தோறும் தென்படுகின்றன
ஒரு
கீரைக்கடையில் விற்கப்படும்
கீரையின்
விலையை விட
மனித உயிர்
இழித்துப் போய்விட்டது
மனிதர்களுக்காக
போராடுகிறோம்
என்று
சொல்லிக்கொண்டு
மனிதனை மாய்த்து வருவது
என்ன தர்மம்?
ஒரு பள்ளியின்
கூரையின் கீழ்
நூற்றுக்கணக்கானவர்களின்
உயிர்களை
மனசாட்சியில்லாமல்
பறித்தவர்களால்
எப்படி இரவில்
உறங்க முடிகிறது
ஒரு சமூகத்தின்
தலைகளை
கொய்து
தன் சமூகத்தின்
அஸ்திவாரங்களாக்குவது
எங்கிருந்து பெற்ற நியாயம்?
எதனையும்
எப்படியும்
அடையலாம்
என்பதானது
அவர்களுக்கு
அவர்களே தோண்டிக்கொள்ளும் குழி
No comments:
Post a Comment