ஓர் இனிய நந்தவனத்தின்
தென்றலை வருடிவருடியே
என் இளமைக்காலம்
கழிந்தது....
திமிரிய
என் இளமைக்கால
உணர்வுகளை
மார்கத்தில் ஒத்தடமெடுத்து
வந்திருக்கின்றேன்....
என் வயதினர்
கடற்கரை
மணலில் பொழுதை
கழிக்கும் போது
நான்
குர்ஆனின் ஆழங்களை
அறிய
அரபு படித்திருக்கின்றேன்...
நவீன கால
நிறங்களில்
இளைஞர்கள்
தங்களை தொலைத்த சந்தர்ப்பத்தில்
நான்,
என்பள்ளிக்கூட
கூரையின் கீழ்
இஸ்லாமிய சட்டங்களை
கற்றுவந்நிருக்கின்றேன்...
அவர்கள்
புதுப்புது மேற்கத்தயவரவுகளில்
இன்பம் கண்டுகொண்டிருந்த
போது
நான்
அரபியில் தெரியாதசொற்களுக்கு
அர்த்தம்
தேடிக்கொண்டிருக்கின்றேன்....
என்னையொத்தவர்கள்
வாழ்க்கையின்
வாளிப்பில்
மயங்கிய நேரம்
நான்
குர்ஆனின்
ஆழ அகலங்களில்
மயங்கிக்கொண்டிருந்திருகின்றேன்
No comments:
Post a Comment