ஓர் இனிய பொழிதின் மடியில்
இன்பம் கொட்டும் விடியலில்
நேற்றிரவு தூங்காத
என் கன்கள் மட்டும்
அலைபாய்ந்து கொண்டிருந்தன.
எத்தனையோ மனிதர்களை
தாண்டி ஓடிய
என்னால்
சில மனிதர்களின்
நச்சுகளைதாங்க முடியவில்லை.
போராடிப் போராடி
களைத்த என்னால்
சில நிஜங்களை
சீரணித்துக்கொள்ள முடிவதில்லை.
எப்போது கருவருக்கலாம்
என்றென்னு ம்
நெஞ்சங்களின் நடுவே
இடறி இடறி
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
புன்னகைத்து புன்னகைத்து
பழி தீர்க்கும்
முகங்களை காணும் போது
நெஞ்சுக்குழியில்
பாராங்கல்விழும் பயம்.
எந்த வதனம்
எனக்கு வசந்தம்.
எங்கிருந்து
நான் எழுவது,
எந்த நட்புடன்
நான் கைகோர்பது?
எதனை நான்
திரிப்திப்படுதுவது?
சுருங்கிச் சுருங்கிடயே
நான் விசாலமடைஹிறேன்...
முதுகு தட்டி விட,
ReplyDeleteகைகள் இருக்கும் போது....
தடுக்கி விழும் போது,
விதையின் விருட்சமாய் எழ
தன்னம்பிக்கை என்ற உரம்
இருக்கும் போது....
உங்களுக்காய்
ஏந்த பல கைகள்
இருக்கும் போது....
உங்கள் வியர்வையை
சிந்தி விட பல நெற்றிகள்
காத்திருக்கும் போது....
ஏன் இந்த பயம்!!!!!!!!!!!!!
ஷிஹாபத்