Thursday, March 4, 2010

மனிதன்..நதி

மனிதன் ஒரு புதிர்
எதனை
அவனுக்கு ஒப்பிடலாம்?

அவன் ஒரு நதியா?

சரிவுகளில்
சறுக்கி கடக்கவும்,
பள்ளங்களில்
தங்கி நிற்கவும்
தரைகளில் ஊர்ந்து
நடக்கவும்
குழிகளில்
நிரந்தரமாக நின்று விடவும்

மனிதனைப் போல்
நதிக்கும்
இயல்புகளுண்டு

கடும் உழைப்பாளி
பாய்ந்து செல்லும்
காற்றாற்று நதியா ?

நல்ல மனம்
தூய்மையான நீர்

அழுக்கு மனம்
ஓடாத நீர்

நதி எப்போதும்
பள்ளம் நோக்கித்தான்
பாயும்
பணக்காரனைக் கண்டு
தலை வலைக்கும்
மனிதனைப்போல்

பணம் எங்கு இருக்கிறதோ
அங்கே
மனிதன் பாய்வான்

ஒரு நதி
தன் ஓட்டத்தை
துரிதப்படுத்த
பெரும் பாராங்கல்லொன்றை
சந்திக்க வேண்டும்
மனிதன்
தான் முக்தி பெற
மிகப் பெரும்
சோதனையொன்றை
எதிர்கொள்ள வேண்டும்

எந்த நதியும்
தன் ஓட்டத்தை
சிறிய தடைகளுக்காக
மாற்றிக்கொள்ளாது
ஒரு இலட்சியம்
நோக்கி
பயணித்த
மனிதனைப்போல்

மனிதன் போல்
கிளைகள் கொண்டதே
நதி.
நல்ல நீர்
தூய்மையான நீர்
பாழ் பட்ட நீர்
அவிந்த நீர்
என்று
மனிதக்குணங்களை போலவே
நீரும்
குணங்களைக்கொண்டிருக்கின்றது

No comments:

Post a Comment