Sunday, February 21, 2010

என்ன நியாயம்

கழுத்து நெறிக்கப்பட்ட
கோழியின்
கதறலைக்
கண்டிருக்கின்றேன்

வெட்டப்பட்ட
மாட்டின் பீரீட்ட
இரத்தத்தையும்
அப்போது
அதன் கண்களில்
தெறியும்
மிரட்சியையும் பார்த்திருக்கின்றேன்

பூனையால்
பிடிபட்ட எலியின்
தப்பிப்பதற்கான
இறுதி முயற்சியையும்
கண்ணுற்றிறுக்கின்றேன்

இவைகள்
நடப்பதெல்லாம்
இருந்துவிட்டுத்தான்

ஒரு மனிதனின்
சாவுக்குப் போராடும்
அந்த
கணத்த கணங்கள்
இப்போதெல்லாம்
நாள்தோறும் தென்படுகின்றன

ஒரு
கீரைக்கடையில் விற்கப்படும்
கீரையின்
விலையை விட
மனித உயிர்
இழித்துப் போய்விட்டது

மனிதர்களுக்காக
போராடுகிறோம்
என்று
சொல்லிக்கொண்டு
மனிதனை மாய்த்து வருவது
என்ன தர்மம்?

ஒரு பள்ளியின்
கூரையின் கீழ்
நூற்றுக்கணக்கானவர்களின்
உயிர்களை
மனசாட்சியில்லாமல்
பறித்தவர்களால்
எப்படி இரவில்
உறங்க முடிகிறது

ஒரு சமூகத்தின்
தலைகளை
கொய்து
தன் சமூகத்தின்
அஸ்திவாரங்களாக்குவது
எங்கிருந்து பெற்ற நியாயம்?

எதனையும்
எப்படியும்
அடையலாம்
என்பதானது
அவர்களுக்கு
அவர்களே தோண்டிக்கொள்ளும் குழி

Saturday, February 20, 2010

எத்தனைக் காலமெடுக்கும் ?

இருளதில்
செப்பித்த
என்
சின்ன
ஆர்த்மார்த்தங்களை
வெளிச்சமதில்
பூப்பிக்க
என்னில்
எத்தனை
உன்மத்த கனவுகள் ?
வாழ்வதில்
வாழ
பூக்களை இரவல்
கேட்கவில்லை,
ஒரு பிடி
சோற்றை
உய்விக்கும்
ஒரு கவளத்தை
யாசிக்கின்றேன்
வீதியோர
நாய்கள்,
தன் இனத்தை
உண்டு மகிழும்
விசமத்தனத்துள்
துவய்ந்துபோன
மனிதப்பிண்டங்கள்
தன் நாவில்
துளிரும் உமிழ்நீருக்கு
மனிதகுருதி தேடுகின்றன
ஆழ்ந்துபோன
மனிதத்துவத்தை
நுனி நாக்கால்
தேடும் அவலம் இன்று
மனித குலத்தில்,
நினைவுகளின்
நெரிசலில்
காணாமல் போன
தூக்கங்கள்
தூர்ந்த விடிவுகளை
கனாக்காணும்
இளைய வதனங்களில்
ஒடிந்து போன
நம்பிக்கைகள்
துவேஷ
தனமெடுத்து
வடிவமைக்கும்
இரத்த வெறியெடுத்த
கொள்கைக்குள்
ஆழ்ந்து போன
மனிதத்துவம்
நிமிர்ந்துவர
எத்தனைக் காலமெடுக்கும்

Friday, February 19, 2010

பயனம்

ஒரு இருண்ட வனத்தின்
கருமையில்
என் கண்களை
பழக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றேன்

இரவைக் கிழித்துவரும்
சப்த்தக் கடாட்சம்
என்னை
பயமுறுத்தினாலும்
மனத்தை திடப்படுத்தி
முன்னேறிக்கொண்டிருக்கின்றேன்

கால்களின்
அடிகளைக்கூட
கவனமாக வைக்கிறேன்

என்னைச் சூழ்ந்து திரியும்
மின்மினிப் பூச்சிகளை
என் பாதை தேடலுக்கான
மின்விளக்காக்கிக் கொள்கிறேன்

கால் இடறி விழுந்த
சந்தர்ப்பங்களில்
என்னில் நானே
நொந்து கொண்டு
என்னை நானே
திடப்படுத்திக்கொள்கிறேன்

காட்டு மிருகங்களின்
கண்களில் பட்டு விடாமல்
வளர்ந்திருக்கும்
முட்களில் தைத்து விடாமல்
என் பயன‌த்தை
தொடர்ந்துகொண்டிருக்கின்றேன்

கிராமம்
தூரத்தில் இருக்கும்
என்ற நம்பிக்கையே
என் இப்போதைய பலம்

மிருகத்தை பிடிக்கும்
பொறிகளில் சிக்கிவிடாமல்
ஆளை விழுங்கும்
குழிகளில்
விழுந்து விடாமல்
இருளை
கிழித்துப் பார்த்து பார்த்து நடக்கின்றேன்

உன்னாலும் உலகை வெல்லாம்

  1. தகர்த்தெறி


"தயங்குபவனால் சிலந்தி வலையைக்கூட சிதைக்க முடியாது,ஆனால் துணிந்தவன் இரும்பு வேலிகளைக்கூட முறித்து எறிவான்.தயக்க வலையைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னம்பிக்கை ஆடையை உடுத்திக் கொண்டு வெளியே வாருங்கள், தடைகளைத் தகர்த்தெறியளாம்

Thursday, February 18, 2010

எப்போது நீ பிறப்பாய் ?

எங்கு தூர்ந்தன
எமது இருப்பு ?
எப்போதிலிருந்து ஆரம்பித்தன
எமது
இருண்ட காலம்!!
எமக்குள் ஏன்
இத்தனை முட்டாள்தனங்கள் ?
எமது மூலத்தை மறந்த
பயணம்
எது மட்டும் ?
நிஜத்தை தொலைத்த
எமக்குள்
எத்தனை போலித்தனங்கள் ?
எம் மூளையை
ஏன் மேற்கத்தியர்களிடம்
அடகுவைத்தோம் ?
எம் சுதந்திரத்தைக் கூட
ஏன் அவர்களிடம்
இறைஞ்சுகிறோம் ?
மோக மயக்கத்தில்
மயக்கி மயக்கியே
எமது முதுகெழும்பை
உடைத்து விட்டனர்.
அற்ப இன்பத்தின் சுவையை
பெரு மகிழ்வாக
எமக்குள்
பதித்து விட்டார்கள்
அறிவியலின்
அடிப்படையே நாங்களென்று
எங்களை நம்பவைத்துவிட்டார்கள்
ஒரு சூனிய அகலத்தில் தள்ளி
வெளிவராமல்
தக்க தந்திர அடைப்பு
செய்துகொண்டிருக்கிறார்கள்
எதற்கு
நாம் இருக்கிறோம்
என்பதையே எமக்குள்
மறைத்து விட்டார்கள்
நவீன உமர் இப்னு அப்துல் அஸீஸே !!
எப்போது
நீ பிறப்பாய் ??

காஷ்மீர் குழந்தை

ஓர் இரத்த சப்தத்தின்
ஆர்ப்பரிப்பில்
பிறந்தது அந்தக் குழந்தை
காஷ்மீரின் குளிர்மை ,
அதன் பனித்துளி வருடலில்
பழக்கப்படாமல்
வெடியோசை கேட்டுக்கொண்டே
வளர்ந்தது அந்தக் குழந்தை
ஒரு தேசமே புன்னகைக்குமா?
அத்தேசம் புன்னகைத்த‌து
மரங்கள் நகைக்குமா?
அங்கு அது நடந்தது,
அது ஒரு சுவர்க்க தேசம்
ஆனால்
அங்கு உயிர்த்த
அந்தக் குழந்தையின்
முகத்தில் மட்டும்
மரண அச்சம்
மனித காலடி யோசை
கேட்டாலே
திடுக்கிட்டது
அக்குழந்தை
அவன் தந்தையின் உயிர்
அவன் தாயின் மரணம்
அவனது உடமை
இவை ஒன்றும்
அவனுக்கு சொந்தமில்லை
அவன் நிலத்தில்
தோன்றும்வசந்த பொழுதுகளும்
அவன் வானத்தில் உதிக்கும்
மிண்ணும் நட்சத்திரங்களும்
அவனுக்கு எப்போதும்
மகிழ்ச்சியாக இருந்ததில்லை

ஏன்

ஓ...அமெரிக்கத் தந்தையே !
ஏன்
எம்மில் அமிலம் தோய்க்கிறாய்
விடிய விடிய
கதறினேன்
ஒரு சொட்டுப்பாலுக்கய்
எனக்கு கிடைத்தது
என் தாயின்
குண்டடிபட்ட
இரத்தம்
என் பொக்கய் வாய்ச்
சிரிப்பில்
என் சின்னச் சின்ன
அசைவுகளில் என் குடும்பமே
மகிழ்ந்திருந்தது
ஓ..அமெரிக்கத் தந்தையே !
உன்
பெற்றோலிய பசிக்காய்
ஏன்
எங்கள் குடும்ப மகிழ்வை
விளைபேசினாய்
காலைப் பனித்துளிகளில்
குளித்து வந்த‌
என் சின்ன வீடு

என்னை
முத்தமிட்டு முத்தமிட்டு
வருடிக்கொடுத்த
என் சகோதரி

என் தொட்டிலருகில்
மணிக்கணக்காய் நின்று
விளையாட்டு காட்டும்
என் பெரிய சகோதரன்

என்னை
அலாக்காய் தூக்கி
கொஞ்சி மகிழும்
என் தந்தை

யாருமே
இல்லையே
என்ன செய்தாய்
இவர்களை

உன்னை கேட்க
யாருமே இல்லையா?

காலை எழுந்தவுடன்
முதல் சப்தமாய் கேட்கும்
அந்த வாங்கொலி

பறவைகளின்
விடிகாலை இன்னிசை

பால்கார தாத்தாவின்
வரண்ட குரல்

தெருவோரம் பயணிக்கும்
பயணிகள் சப்தம்

எங்கே மாண்டன
இவைகள் எல்லாம்

என்ன இல்லை உனக்கு ?

எழுந்திடு எழுந்திடு
துணிந்தால் உனக்கு
வானமும் எட்டும் தூரம்!

என்ன இல்லை உனக்கு ?

ஒரு கவளச்
சோறின்றிச் சாகும்
இவ்வுலகில்
என்ன இல்லை உனக்கு ?

இறைவன் கொடுத்த‌
அறிவுப் பலம்
ஆரோக்கிய‌ உட‌ல் ப‌ல‌ம்
இஸ்லாத்தை விள‌ங்கிய‌ உள்ள‌ம்
இத‌னைவிட‌
உல‌கில் உன‌க்கென்ன‌ வேண்டும் ?

உல‌கில்
உய‌ர்வ‌டையும் பாதை
ம‌ல‌ர் தூவிய‌த‌ல்ல‌ என்ற‌
ய‌தார்த்த‌ம் புரி,

நினைத்தால்
ந‌ட‌ந்துவிடும்
மாயாஜால‌ உல‌க‌ம‌ல்ல‌
என்ற‌
உண்மை விள‌ங்கு,

உழைப்பும்
விய‌ர்வையுமே
விடிவின் திற‌வுகோள் என்ற‌
ஞான‌ம் கொள்.

என்ன இல்லை உனக்கு ?

இறைவ‌னின் அருள்
அத‌னை இறைஞ்ச‌
இர‌ண்டு கைக‌ள்.

என்ன இல்லை உனக்கு ?

உன‌க்குள்
ப‌ற்றும் சிறிய‌ தீப்பொறி
உன்னை உல‌குக்கு காட்டும்
பெரும் பிழ‌ம்பாக‌ட்டும்

இடைக்கிடை உன்னை
காயப்ப‌டுத்தும்
தோல்விக‌ளால்
நீ
எரிந்து விட‌தே!!!

Monday, February 15, 2010

இளமைக்காலம்

ஓர் இனிய நந்தவனத்தின்
தென்றலை வருடிவருடியே
என் இளமைக்காலம்
கழிந்தது....

திமிரிய‌
என் இளமைக்கால
உணர்வுக‌ளை
மார்க‌த்தில் ஒத்த‌ட‌மெடுத்து
வ‌ந்திருக்கின்றேன்....

என் வ‌ய‌தின‌ர்
கட‌ற்க‌ரை
ம‌ண‌லில் பொழுதை
கழிக்கும் போது
நான்
குர்ஆனின் ஆழ‌ங்க‌ளை
அறிய‌
அரபு ப‌டித்திருக்கின்றேன்...

நவீன கால
நிற‌ங்களில்
இளைஞ‌ர்க‌ள்
தங்க‌ளை தொலைத்த‌ ச‌ந்த‌ர்ப்பத்தில்
நான்,
என்பள்ளிக்கூட‌
கூரையின் கீழ்
இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை
கற்றுவ‌ந்நிருக்கின்றேன்...

அவ‌ர்க‌ள்
புதுப்புது மேற்கத்த‌ய‌வ‌ரவுக‌ளில்
இன்ப‌ம் க‌ண்டுகொண்டிருந்த‌
போது
நான்
அரபியில் தெரியாத‌சொற்க‌ளுக்கு
அர்த்த‌ம்
தேடிக்கொண்டிருக்கின்றேன்....

என்னையொத்தவ‌ர்கள்
வாழ்க்கையின்
வாளிப்பில்
ம‌ய‌ங்கிய‌ நேரம்
நான்
குர்ஆனின்
ஆழ‌ அகலங்க‌ளில்
ம‌ய‌ங்கிக்கொண்டிருந்திருகின்றேன்

Sunday, February 14, 2010

ப‌ய‌ம்

ஓர் இனிய பொழிதின் மடியில்
இன்ப‌ம் கொட்டும் விடிய‌லில்
நேற்றிரவு தூங்காத‌
என் க‌ன்க‌ள் ம‌ட்டும்
அலைபாய்ந்து கொண்டிருந்த‌ன‌.


எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ளை
தாண்டி ஓடிய‌
என்னால்
சில‌ ம‌னித‌ர்க‌ளின்
நச்சுக‌ளைதாங்க‌ முடிய‌வில்லை.


போராடிப் போராடி
க‌ளைத்த‌ என்னால்
சில‌ நிஜ‌ங்க‌ளை
சீர‌ணித்துக்கொள்ள முடிவ‌தில்லை.


எப்போது க‌ருவ‌ருக்க‌லாம்
என்றென்னு ம்
நெஞ்ச‌ங்க‌ளின் ந‌டுவே
இட‌றி இட‌றி
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
புன்ன‌கைத்து புன்னகைத்து
ப‌ழி தீர்க்கும்
முக‌ங்க‌ளை காணும் போது
நெஞ்சுக்குழியில்
பாராங்க‌ல்விழும் ப‌ய‌ம்.


எந்த‌ வ‌த‌ன‌ம்
என‌க்கு வச‌ந்த‌ம்.


எங்கிருந்து
நான் எழுவ‌து,


எந்த‌ ந‌ட்புட‌ன்
நான் கைகோர்ப‌து?


எத‌னை நான்
திரிப்திப்ப‌டுதுவ‌து?
சுருங்கிச் சுருங்கிடயே
நான் விசால‌ம‌டைஹிறேன்...

நான்

நான்
நொடிந்து விழ
நானொன்றும்
முருங்கை மரமல்ல
வாயில் அப்பி
சப்பித்துப்ப
நானொன்றும்
வெத்திலை இலையல்ல
கசக்கியெறிந்து மகிழ்ச்சிப்பட
நானொன்றும் காகிதமல்ல
வாழ்க்கையின்
நெளிவு சுளிவுகளை
மனப்பாடம் செய்தே
நான் பயனித்திருக்கின்றேன்

Saturday, February 13, 2010

கவிதை

ஒரு
காகிதம் கொடு
என்னை எழுதுவ‌த‌ற்கு,
நான் ஆழ‌ம‌ர‌மாக‌
வான‌ம் செழிக்க
எத்த‌னை சூறாவ‌ளிக‌ளை
தாங்கியிருப்பேன்