Wednesday, March 2, 2011

இது உங்கள் பிள்ளையின் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா....?

கடந்த இரு வாரங்களாக இஹ்லாஸ் ஒவ்வொரு இரவும் தான் படுக்கைக்குச் செல்லுமுன் தனது தாயைப் பார்த்து "மீண்டும் அலுமாரியைக் கொஞ்சம் பார்த்தாயா?" என்று கேட்க ஆரம்பித்திருந்தான். "நான் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் பார்த்து விட்டேன், நீ அமைதியாக தூங்கு "என்று அவனது தாயும் சொல்லி வந்தாள்.



அது மட்டுமல்லாது இஹ்லாஸ் தனது தாயிடம் கட்டிலின் கீழேயும், திரைச் சீலைக்குப் பின்னாலும் பார்க்கச் சொல்லத் தவறியதில்லை.



"அவ‌ன் எப்போதும் தாயிட‌ம் "உறுதியாக‌ச் சொல்ல‌ முடியாது, எந்த‌ இட‌த்திலும் சில‌ந்தி இருக்க‌லாம்" என‌க் கூறி வந்தான்.

ஒரு நாள் இர‌வு அவ‌ன் ஐய‌ம் உண்மையாகிய‌து.ஆம் ஒரு நாள் அவன் குளியளரைக்கு சென்ற போது அங்கு சிலந்தியொன்றைக் கண்டு அதிர்ச்சியுற்றான் ,பின்பு கூச்சலிட்டான் . த‌ன‌து த‌ந்தை அத‌னைத் தூர‌ வீசியும், மீண்டும் இன்னொரு சில‌ந்தி வெளி வ‌ர‌லாம் என்று அவ‌ன் அச்ச‌ம் கொண்டான்.
அவன் எல்லா பூச்சியனங்களுக்கும் பயப்பட ஆரம்பித்திருந்தான்


இதனையறிந்து அதிர்சிக்குள்ளான அவனது பெற்றோர்கள் அவனது நிலையை மாற்ற பூச்சியினங்கள் தொடர்பான புத்தகங்கள் முதலிய பல வாசிப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆயினும் இப் பிரச்சினை முடிவிலியைக் கொண்டதென உணர்ந்த அவர்கள், தனது மகனை சிறுவர் நல வைத்தியரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

ஆயினும், இறுதி வரையும் தனது மகனின் பிரச்சினையைக் கண்டறியத் தவறினார்கள்.

அப்போது, இஹ்லாஸின் தாய் "உண்மையாகவே அவனுக்கு சிலந்நியைப் பற்றிய பயம் உள்ளதா அல்லது அவன் பொய் சொல்கிறாளா?" என்று சந்தேகம் கொண்டாள்.

இறுதியிள் அவன் "நான் எதற்கும் பயப்படவில்லை, ஆயினும் நான் நடக்கவிருப்பதை எதிர் பார்த்தேன்." என ஒத்துக் கொண்டான்.

No comments:

Post a Comment