Friday, March 18, 2011

நம் வீடு




சளிப்படைந்த
உடல்,
களைப்படைந்த
மனம்,
ஆறுதலும்,சாந்தமும்
அவன் வீடுதான்.

எங்கும் சுற்றி
எதற்கும் சென்று
கிடைக்காத நிம்மதியும்,
சுதந்திரமும்
கொடுக்கும் நம் வீடு.

உசுறுக்குள்
உசுறாக....
மனத்துக்கு
இதமாக......
நிம்மதி கொடுக்கும்
நம் வீடு.

அது
எத்தனை உயரம்?
எத்தனை மதிப்பு ?
எவ்வளவு அழகு ?
என்றெல்லாம்
பார்ப்பதில்லை
மனது,....

படுக்க
இடம் மட்டுமென்றாலும்
அதுவே
அவனுக்கு
சுவர்க்க சுகம்....

பூமியில்
அவனுக்கென்று
ஒரு புனிதம்.

தனக்கு மட்டுமான
ஒரு
சுகதுக்கம்.

No comments:

Post a Comment