Wednesday, March 2, 2011

என் கால்கள்

என் கால்காளின்
ஓட்டம்
என்னை சமைத்திருக்கின்றன,
எத்தனை தூரம்
இவைகள் எனக்காக
ஓடியிருக்கின்றன,
ஒரு சோற்றுப்பிடிக்காக
ஓடியது முதல்
இன்று
இவ்வுயரம் கண்டபின்பும்
இவைகளின்
ஓட்டம் மட்டும்
ஓயவில்லை.
ஒவ்வொரு அச்சாக
இவைகள் என்னை
சமைதிருக்கின்றன,
மனம் சோர்வடையும்
போதுகூட
இவைகள் எனக்காக
ஓடிக்கொண்டுதான் இருக்கும்,
வாழ்க்கையின்
வாளிப்புக்களில்
மயங்கியும்
சோகங்களில் மூழ்கியும்
இவய்கள் என்னோடேயே
பயனித்திருக்கின்றன.

No comments:

Post a Comment