Sunday, March 7, 2010

இன்பத் தமிழே

மெல்லச் சிரிப்பவளே உன்
கொடி இடை அசைந்தது பார்
முத்து உன் பல்லழ‌கின் வெளிச்சம்
மின்னும் அழகினைப் பார்
உன் அசைந்த கூந்தல் முகர்ந்து என்
மனம் கசிந்தது பார்
வாளிப்பான உன் அங்கம் கண்டு என்
மேனி புள்ளரிக்கும் நிகழ்வு பார்

இன்ப ஊற்றே காலைத்
தென்றல் தொடுவது போல்
இன்பம் பெருகுதடி உன்
அழகு சிந்துதடி கொடியே
உன் மூச்சு மணக்குதடி இளம்
வாழைக்குருத்தடி நீ
என் மஞ்சம் காணும் தருணம் உன்
இளமை முக்தி பெரும்

இன்பத் தமிழ்க்கவிதை அழகு
குரலில் பிறக்கும் தருணம்
உன் இதழே என் கருத்தில் பிறக்கும் உயிர்
ஓவியமடி நீ என் அழகே
உன் பிறந்த அர்த்தம் புரிய நீ
என் நெஞ்சில் சாய்
உலகம் உனக்கு உவகையாகும்

No comments:

Post a Comment