எங்களில்
இன்பம் கொட்டு
உன்
எண்ணெய்
தடவிய
இறகால்
எங்கள் மனசு தடவு
எங்கள்
நரம்புகளில் ஒட்டியிருக்கும்
கறை கழுவு
உள்ளுக்குள்
முரண்டு பிடிக்கும்
மிருகமடக்கு
மென்மையை
ஊற்றி
இதயம் கழுவு
மனித
வார்த்தைகளால்
புண் படும் போது
ஒலிவொயிலாகு
உலக மாந்தர்
இறுகும் போது
இளக விடு
வாழ்க்கை
வழிந்தோடும் போது
இருக விடு
விடிகாலை
பறவைகளின் சங்கீதம்
விடிந்ததும்
கண்விழிக்கும்
குழந்தைகளின் சங்கீதம்
பூக்களின்
சிணுங்கள் சங்கீதம்
சாலைகளில்
சனங்களின்
சலசலப்பூ சங்கீதம்
இரவின்
இடுப்பில்
உறங்கும்
அமைதிச் சங்கீதம்
இசையே நீ
எதற்குள்
கருவிருந்தாய்?
No comments:
Post a Comment