Sunday, March 7, 2010

வெண்கட்டி

எத்தனையோ
கனவுகளின்
கைக‌ளுக்கு
ஊன்றுகோள் கொடுத்தவன்.

மூளையில்
புதைந்து கிடந்த
எத்தனையோ
அறிவியல் விலாசங்களுக்கு
முகவரி கொடுத்தவன்.

பிள்ளையின்
மனங்களின்
கருப்பு பகுதிக்கு
அறிவியல்
வெண்சாயம் பாய்ச்சியவன்.

துருப்பிடித்த
மூளைகளையும்
சலவை செய்த
ஓர் அறிவியல் தொழிலாளி.

உலகை
கரும்பலகையில்
அறிமுகப்படுத்திய‌
வித்தைக்காரன்.

பெரிய சாம்ராஜ்யங்களின்
தலையெழுத்தையே
மாற்றிய
வீரர்களின்
ஆரம்ப ஆயுதம்.

ஒரு வகுப்பரை
உலகை
புடம் போட
போதுமானவை.
அவ்வகுப்பரையின்
அச்சானியே
வெண்கட்டிதான்!!!

1 comment:

  1. Hi i am Haziq Fowsar I like your website very mch and its great

    ReplyDelete