Friday, April 29, 2011
ஜன்னல் மலர்
அவள்
வயதுக்கு
வந்திருந்தாள்.
ஆயிரத்தெட்டு
கனவுகளை
அவள் உள்ளம்
சுமந்து நின்றது.
தன்
சங்கம நாளை
பூரிப்போடு
எதிர்பார்த்திருந்தாள்.
மாததிற்கு ஒரு நாள்
வரும்
பௌர்ணமி போல்.
அவள் வீட்டு
ஜன்னலில்
இருந்து விட்டு
முகம் காட்டுவாள்.
நாட்கள்
மாதங்களில் ஏற
வருடங்கள் ஓட
அவளுக்கு
வயதும்
ஏறிச்சென்றன...
ஜன்னலூடாக
இருந்திருந்து
தோன்றிய- அவள் முகம்
நாள்தோறும்
புஸ்பிக்கத்தொடங்கியது.
தந்தையின் இயலாமை
தாயின் பெருமூச்சு
கலியாணம் அவளுக்கு
ஒரு
கனவாக மட்டுமே இருந்தது.
கொன்சநாளாக
அவள்
ஜன்னல்
கம்பியாகவே
மறியிருந்தாள்.
அந்த
ஜன்னல் முகத்தில்
சமூகத்தை
சுட்டெரிக்கும்
நெருப்பு
சாவகாசமாய்
எரிந்துகொண்டிருந்தது.
ஆண்களுக்கு
இரத்தமில்லை
கல்யாண வயதானதும்
சீதனத்தால்
இரத்தமேற்றப்படுகிறார்கள்
கலியான ராமர்களுக்காக
சீதைகள் இங்கு
வில்
உடைத்துகொண்டிருக்கிறார்கள்.
பணத்தைக் கொடுத்து
பெண்ணையும் கொடுக்கும்
கல்யாணம்
வித்யாசமான
ஒரு வியாபாரம்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment