Monday, April 25, 2011

சிகரம் தொடுவோம்



காலக் காற்றில்
புதர்களாய்
அடித்து
செல்லப்பட்ட
எமது ஆசைகளை
இருட்டில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

சரித்திர சூறாவளிகள்
எமது சமுதாய கல்வியை
துவம்சம் செய்து விட்டன.

விடியும் எதிர்காலம்
எம்மை
சிகரத்தில்
உயர்த்தவேண்டும்.
எம் மக்களின்
அறிவு
சுடர்விடவேண்டும்.

அடர்ந்த காடு
தீப்பற்றிவிட்டது
அந்த சாம்பளை
பசளையாக கொண்டு
நாம் முளைத்திடுவோம்.

அறியாமை
சமூகம்
என்ற கருப்பு முகம்
துடைக்கப்பட்டு
இரவு விடிவெள்ளியாய்
வளம்
வருவோம்.

வியாபார வில்ங்குகளிலிருந்து
விடுபட்டு
பூமியின்
அரசர்களாய்
ஆகிிடுவோம்.

சூன்யமாகிப் போனது
எமது எதிர்காலம்
அறிவு சுமந்த
முன்மாதிரியை
முன்மொழியும்
புத்திரர்களாக
நாம் மாறிவிடுவோம்.

எமக்குள் நாமே
எரிமலையாகுவோம்....

No comments:

Post a Comment