சும்மா இருந்தவனை
உசுப் பேற்றிய
உன் கண்கள்
உன் சுவாசக்காற்றால்
பட படத்துக்
கிழியும்
நாள் காட்டியாய்
நான்
அழகிய
நட்சத்திரக் குவியலில்
பீச்சியடிக்கும்
மின்மினியாய்
நீ
அந்த மின்மினியின்
அழகில்
மயங்கித்தொலைத்தவனாய்
நான்
நீ ஈரமான தீ
அதில்
நான் மட்டுமே
குளிர் காய்கிறேன்
போர்கால வீரனுக்கும்
உட்சாகம் தரும்
தன் காதலியின் நினைவுகள்
ஒன்றுமிலாதவனைக் கூட
உயரம் தொடவைக்கும்
காதல் எண்ணங்கள்
தூக்கமில்லாத இரவுகள்
கொடுத்த வல்லமை
உனக்கு எப்படி வாய்த்தது?
மின்சாரம் அறுந்ததும்
தீப்பெட்டி தேடும்
மனநிலைதான்
உன்னை நான் காணாத போது .
இப்படியெல்லாம்
எப்படித்தான் பொய்யாக
எழுத முடிகிறது ?
No comments:
Post a Comment