ஓர் இரவு
ஓர் கனவு
ஒர்
உயர்ந்த நதியை
நான் சுமக்கிறேன்
வாழ்க்கையின்
புதிய
வாசல்கள்
எனக்காக
திறந்திருக்கிறது
நான்
வாழ்வை
ஒரு விளையாட்டாகவே
பார்த்து பழகி விட்டேன்
திறந்த பொக்கிசம்
இந்த
உலகம்
என்ன இல்லை
இதில்
அள்ளிக்கொள்ள
இந்த உலகை
வாழ சில சூட்சுமங்கள்
தெரிந்திருக்க வேண்டும்.
இது ஒரு
அட்சய பாத்திரம் .
இது ஒரு
அடர்ந்த
தங்கச் சுரங்கம்.
கடலுக்குள்
முத்துக்குளிப்பவனுக்குள்ள
அனுபவம்
வாழ்க்கையை
வசப்படுத்துபவனுக்கும்
வேண்டும்
No comments:
Post a Comment