Sunday, December 5, 2010

WIZ EXTRAVAGANZA 2010

DR Inamullah and Director with wisdom teachers



DR Alistair Smith and director and shihafath

Tuesday, November 9, 2010

Saturday, October 2, 2010

ஈரமான தீ

சும்மா இருந்தவனை
உசுப் பேற்றிய
உன் கண்கள்


உன் சுவாசக்காற்றால்
பட படத்துக்
கிழியும்
நாள் காட்டியாய்
நான்

அழகிய
நட்சத்திரக் குவியலில்
பீச்சியடிக்கும்
மின்மினியாய்
நீ


அந்த மின்மினியின்
அழகில்
மயங்கித்தொலைத்தவனாய்
நான்


நீ ஈரமான தீ
அதில்
நான் மட்டுமே
குளிர் காய்கிறேன்


போர்கால வீரனுக்கும்
உட்சாகம் தரும்
தன் காதலியின் நினைவுகள்


ஒன்றுமிலாதவனைக் கூட
உயரம் தொடவைக்கும்
காதல் எண்ணங்கள்


தூக்கமில்லாத‌ இரவுகள்
கொடுத்த வல்லமை
உனக்கு எப்படி வாய்த்தது?


மின்சாரம் அறுந்ததும்
தீப்பெட்டி தேடும்
மனநிலைதான்
உன்னை நான் காணாத‌ போது .


இப்படியெல்லாம்
எப்படித்தான் பொய்யாக
எழுத முடிகிறது ?

Friday, October 1, 2010

அட்சய பாத்திரம்

ஓர் இரவு
ஓர் கனவு
ஒர்
உயர்ந்த நதியை
நான் சுமக்கிறேன்
வாழ்க்கையின்
புதிய
வாசல்கள்
எனக்காக
திறந்திருக்கிறது
நான்
வாழ்வை
ஒரு விளையாட்டாகவே
பார்த்து பழகி விட்டேன்
திறந்த பொக்கிசம்
இந்த
உலகம்
என்ன இல்லை
இதில்
அள்ளிக்கொள்ள‌
இந்த உலகை
வாழ சில சூட்சுமங்கள்
தெரிந்திருக்க வேண்டும்.
இது ஒரு
அட்சய பாத்திரம் .
இது ஒரு
அடர்ந்த
தங்கச் சுரங்கம்.
கடலுக்குள்
முத்துக்குளிப்பவனுக்குள்ள
அனுபவம்
வாழ்க்கையை
வசப்படுத்துபவனுக்கும்
வேண்டும்

எனது ஒபிஸில்




Wednesday, September 29, 2010


  • நீயென்ன
  • மண்ணில் விழுந்து
  • வாசத்தை
  • கிளப்பும்
  • மழைத்தூறலா?
  • நானென்ன
  • அந்த தூறலில்
  • நனைந்து
  • போய் விட்ட
  • பறவையின் றெக்கையா ?
  • நீ யென்ன
  • குளத்தை
  • உடைத்து தெருவில்
  • ஓடும் ஓடையா?
  • நானென்ன
  • அந்ந ஓடையில்
  • விடப்பட்டு மூழ்கிய‌
  • காகிதக் கப்பலா?

Tuesday, September 7, 2010

எனது வீட்டில்


ஆற்றல்

ஆற்றல் மிகுந்த மனிதன் வளருவதற்கான திறமைகளைத் தனக்குள்ளே தேடுகிறான் . ஆற்றல் இல்லாத மனிதன்
மற்றவர்களிடம் உள்ள குறைகளைத் தேடுகிறான்.

வானம் எட்டும் தூரம்



தயங்குபவனால் சிலந்தி வலையைக்கூடச் சிதைக்க முடியாது. ஆனால் துணிந்தவன் இரும்பு வேளிகளைக்கூட முறித்து எறிவான். த்யக்க வலையைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னம்பிக்கை ஆடையை உடுத்திக்கொண்டு
வெளியே வாருங்கள்.......தடைகளைத் தகர்த்தெறியலாம்!..

Monday, September 6, 2010