Saturday, May 28, 2011

தவ்ஹீத் ஜமாத்

10 வருடங்களுக்கு முன்பு எமது ஊர் ஓர் ஆன்மீக பூமியாக மிளிர்ந்தது.எமது ஊர் ஒரு தலைவரின் கட்டுக்கோப்புக்குள் அடங்கிக்கிடந்தது.உள மகிழ்வோடுதான் அனைவரும் அவரைப் பின்பற்றினர்.இப்படியிருக்கும் போதுதான் தவ்ஹீத் ஜமாத் எமது ஊருக்குள் நுளைந்தது.அப்போது அதனை நாம் எமது ஊருக்குகிடைத்திருக்கும் வரம் என்றுதான் எண்ணியிருதோம் . அதற்காக எமது உழைப்பு , பணம் ,நேரம் அனைத்தையும் தியாகம் செய்தோம். நிறைய உலமாக்கள் வந்தார்கள்.அவர்களின் பேச்சில் தெரிக்கும் அனல்வர்த்தைகளில் சொக்கிப்போனோம்.
நாட்களும் கடந்தது . புதிய அலையொன்று வீசத்தொடங்கியது...ஒரு பள்ளி கட்டவேண்டும்....பள்ளியும் கட்டி முடிக்கபட்டது....
உலமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்....ஒன்று புரிபட்த்துவங்கிய்து....ஒவ்வரு உலமாவும் ஒவ்வொரு தான் நினைத்த, தான் வாசித்த கருத்துக்களை சொல்லிவிட்டு போனார்கள்.பொது மக்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.....கொஞ்ச நாளில் புரிந்து போனது .தலைவரில்லாத,
யாருக்கும் கட்டுபடபிடிக்காத கூட்டம் இது என்று.இவ்வளவுக்குள்ளும் எமது ஊரில் ஒன்று நடந்து முடிந்துவிட்டிருந்தது. அது தான் ரஷ்யா மாதிரி பல பிரிவுகளாக பிளவு பட்டு போயிருந்தது.....அல்லாதான் அனைத்தும் அறிந்தவன்

Saturday, May 7, 2011

வான் முட்டும் கனவுக்கங்கள்



தூங்கும் விழிகளில்
கனவுப் பூக்கள்

அமைதி கொண்ட
நெஞ்சமதில்
அலை அலையாய்
இறந்தகால
நிஜங்கள்.

ஓ.....
இனிமையான் காற்றுக்கள்
பளிச்சிடும் வதனங்கள்
புள்ளாங்குழல் வாசிக்கும்
குயில்கள்.

ஒரு நிகழ்வு
ஒரு வார்த்தை
மனிதரில்
பல மாற்றாங்களை
கொண்டுவரலாம்

பிரார்த்தனை